வன்னேரிக்குளத்தில் யானைகளால் நெருக்கடியை நோக்கியுள்ள விவசாயிகள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில், யானைகளால் தற்போது காலபோக நெற்செய்கை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

அறுவடை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் யானைகள் வயல் நிலங்களுக்குள் புகுந்து கொள்வதன் காரணமாக நெற்பயிர்களுக்கான காவல்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வன்னேரிக்குளத்தின் மண்ணியாகுளம் பகுதியில் மானாவாரி நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் வன்னேரிக்குளத்தின் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர்ப்பாசன நெற்செய்கைக்குள்ளும் யானைகள் வருவதன் காரணமாக விவசாயிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

யானைகளின் நெருக்கடி தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் யானைகள் தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்னேரிக்குளம் கிராமத்திற்குச் சென்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைவெடிகள் கூட வழங்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers