மதுபோதையில் மின் கம்பத்தில் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இளைஞர் ஒருவர் சாராயம் குடித்து விட்டு மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்று மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை, வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாராயம் குடித்து விட்டு கடுமையான மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று மின் கம்பத்தில் மோதியதிலே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.