புதிய பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு கோரிக்கை!

Report Print Mohan Mohan in சமூகம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எதிர்த்து குரல் கோடுக்கவேண்டும் என முல்லைத்தீவு பெண்கள் செயற்பாட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பெண்கள் செயற்பாடு வலையமைப்பின் தலைவி ஜென்சிலா இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் போது அங்குள்ள முஸ்லிம், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட எமது அலுவலகத்தில் நேற்று நடத்தியுள்ளோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபு, இரண்டு சட்டங்களும் எங்கள் மக்களுக்கு தேவை இல்லை என்பது எங்களுடைய நிலைப்பாடக உள்ளது

எனவே இது தொடர்பில் தமிழ்மக்கள் பிரநிதிகள் குறிப்பாக வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இந்த இரண்டு சட்டங்களும் எங்கள் மக்களுக்கு தேவை இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கையினை விடுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.