வவுனியா தரணிக்குளத்தில் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தரணிக்குளத்தில் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகாரசபை வவுனியா மாவட்ட உதவி முகாமையாளர் சுசிகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோதாரலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் து.நடராஜசிங்கன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தம்பனைச்சோலை, மகாறம்பைக்குளம், தரணிக்குளம், புதியநகர், கட்டையர்குளம், பீடியாபாம் ஆகிய ஆறு கிராமங்களில் 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.