கோணாவில் பிரதேசத்தில் மக்களை தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல்

Report Print Yathu in சமூகம்

கோணாவில் பிரதேச சிறுவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மக்கள் மத்தியில் இருந்த அச்சம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

கிளிநாச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் குறிதத் சந்திப்பு பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிதத் சந்திப்பில் கிளிநாச்சி பொலிஸ் அத்தியட்சகர் R.M.D.J ரட்ணாயக்க மற்றும் கிளிநாச்சி தலைமை பொலிஸ் அதிகாரி A.G.B.M பாடெனிய, கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி சத்துரங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும், கிராம சேவையாளர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் அப்பகுதியை சேர்ந்த சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாடசாலை விளையாட்டு போட்டி தடைப்பட்டமை அனைவரும் இணைந்து நடார்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாலை நேர வகுப்புக்கள் மற்றும் பாடசாலையில் 1.30 மேல் யாரும் நிற்க கூடாது என கல்வி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளமையால் தமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இதன்போது பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், கல்வி செயற்பாட்டை வழமைபோன்று கொண்டு நடார்த்துவத்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்களை விட சிறுவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் போதைப்பொருட்களை பயன்படுத்தகின்றனர். இதனால் மாலை நேரங்களில் பெண்பிள்ளைகள் அந்த பகுதிகளால் வீதியி செல்ல முடியாது உள்ளது.

இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிசாரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு உரையாற்றிய கிளிநாச்சி தலைமை பொலிஸ் அதிகாரி A.G.B.M பாடெனிய (HQI) மற்றும் கிளிநாச்சி பொலிஸ் அத்தியட்சகர் (SP) R.M.D.J ரட்ணாயக்க ஆகியோர் குறிப்பிடுகையில்,

இந்த கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை, மர கடத்தல், மண் அகழ்வு ஆகியன இடம்பெற்று வருகின்றது. நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இவற்றை செய்பவர்கள் உடன் நிறுத்த வேண்டும். இல்லாது விடின் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.

ஜனாதிபதி அவர்கள் முல்லைத்தீவில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டினை அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.

அந்த செயற்திட்டத்தின் பிரகாரம் பொலிசாராகிய நாம் மாணவர்கள், இளைஞர்களை விழிப்பூட்டி வருகின்றோம். இங்கு உள்ளவர்களில் உங்கள் பிள்ளைகள் போதைப்பொருளிற்கு அடிமையாவதை யாரும் விரும்ப மாட்டீர்கள்.

எனவே உங்கள் பிள்ளைகளை சீராக வளருங்கள். அவர்களை கண்காணியுங்கள். போதைப்பொருள் தொடர்பில் எம்மோடு சேர்ந்து பயணித்தால்தான் கட்டுப்படுத்த முடியும்.

போதைப்பொருள் மற்றும் அதியாவசிய முறைப்பாடுகள் தொடர்பில் என்னிடம் தொலைபேசி ஊடாக முறைப்பாடு தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித் கலந்துரையாடலில் கிளிநாச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் ஜீவநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் மட்டும் போதாது. மக்களாகிய நீங்களும் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.