புதிய ஆளுநர் வழங்கிய வாக்குறுதி! மகிழ்ச்சியில் சிவில் சமூகம்

Report Print Mubarak in சமூகம்

ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினர் இன்று கலந்துரையாடியுள்ளனர்.

மட்டக்களப்பு ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக பாடசாலை பிரச்சினை, காணிப்பிரச்சினை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சினை தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் தீர்வு திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக வந்துள்ளதை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், மகிழ்ச்சி அடைவதாகும் சிவில் சமூகம் அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும், முடியுமான பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் மே மாதம் அளவில் மட்டக்களப்பு சிவில் சமூகத்தை சந்தித்து கலந்துரையாடுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.