ஆசிரியருக்கு கடூழிய சிறைத்தண்டனை! வருத்தத்தில் மைத்திரி

Report Print Vethu Vethu in சமூகம்

ஆசிரியர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கியமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாணவனை தாக்கியமை தொடர்பில் ஆசிரியர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கியமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாலியில் இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.