தென்னிலங்கையில் கைது செய்யப்பட்ட பெருமளவு வெளிநாட்டவர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

மத்துகம பிரதேசத்தில் 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் குறித்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி இங்கிரிய பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.