கால்நடை வளர்ப்பாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை பூராகவும் அண்மையில் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்த நிலையில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷ்டங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இழப்புக்களை சந்தித்த பண்னை உரிமையாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண மத்திய அரசாங்க அமைச்சுக்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளார். இது குறித்த அவர் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும்,

அண்மையில் கால் நடைகளுக்கு ஏற்பட்ட நோய் காரணமாக பல மாடுகள், ஆடுகள் இறந்துள்ளன. இதனால் பண்னை வளர்ப்பாளர்கள் பாரிய கஷ்டங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கால் நடைகள் இறந்துள்ளன.

கால் நடைகளுக்கான நோய் காரணமாகவே இவ்வாறு இறப்பு சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றதாக மாகாண கால் நடைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

கடந்த ஒன்றரை மாத காலமாக கால் நடைகள் இறப்பு சம்பவங்கள் திருகோணமலையில் பதிவாகிய நிலையில் தொடர்ந்து வந்தது. ஒவ்வொரு பண்ணையாளர்களுக்கும் இரண்டுக்கு

மேற்பட்ட என்ற விகிதத்தில் கால் நடைகள் இறப்புச் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது.

எனவே பண்னை வளர்ப்பாளர்களின் நலன் கருதி நஷ்ட ஈட்டுத் தொகைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வருமாறும் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக கொண்டு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers