வானக்காடு தோட்டத்தில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவை - வானக்காடு தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் 12 குடும்பங்கள் வரையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க அமைச்சர் பழனி திகாம்பரத்தால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்பு திட்டத்திற்கான இடத்தினை தோட்ட முகாமையாளருடன், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் சிவனேசன், அமைச்சரின் பிரத்தியோக உதவியாளர் கமலதாசன், பிரதேச சபை உறுப்பினர் நிர்மலாதேவி, ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்தோடு தற்காலிக குடியிருப்புகளுக்கான குடிநீர் வசதியினையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Latest Offers