பாக்கு பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கொடுமை

Report Print Manju in சமூகம்

அநுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கொழுக்கித் தடியின் உதவியால் பாக்கு பறிப்பதற்கு சென்றபோது கொழுக்கித் தடி முறிந்து அரிவாளுடன் தலையின் உச்சியில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் கொழுக்கித் தடியின் ஒரு பகுதி தலையின் உட்பகுதிக்குள் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று இரவு, குறித்த நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபருகு்கு எந்தவொரு தீவிரமான பாதிப்பும் இல்லை எனவும் , மூளை பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers