புதையல் தோண்டிய நால்வர் கைது

Report Print Mubarak in சமூகம்

அநுராதபுரம் - கெக்கிராவ, மடாடுகம துனுமடலாவ பகுதியில் புதையல் தோண்டிய நான்கு பேரை கெகிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மேலும் நான்கு பேரையும் இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மடாடுகம, கிகுள, அவிஸ்ஸவெல்ல, கேகாலை ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest Offers