வானக்காடு தோட்ட மக்களுக்கு தனி வீடுகள்! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொகவந்தலாவை, வானக்காடு தோட்ட மக்களுக்கு விரைவில் தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை, வானக்காடு பகுதியில் தீ அபாயத்துக்கு உள்ளாகி தற்காலிக வதிவிடத்தில் தங்கியிருக்கும் மக்களை இன்று காலை நேரில் சந்தித்து இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

பொகவந்தலாவை பகுதியின் மிகவும் கஷ்ட பிரதேசமான வானக்காடு, சிங்காரவத்தை பகுதிக்கு 50 தனிவீடுகள் அமைப்பதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு உத்தேசித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பாதிப்பிற்கு உள்ளான மக்களின் அவசர தேவையின் நிமித்தம் 13 வீடுகளுடன் அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் மக்களுக்குமாக சேர்த்து 25 தனி வீடுகளை அமைக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உடன் தொழிலாளர் தேசிய சங்க பொது செயலாளர் எஸ்.பிலிப், நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் பா. சிவநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிர்மலா ஆகியோரும் ஸ்தலத்திற்கு சென்றிருந்தனர்.

Latest Offers