மாணவர்கள் போதை மாத்திரையால் வாழ்க்கையை தொலைக்கின்றனர்! அமீர் அலி

Report Print Navoj in சமூகம்

கல்குடா பிரதேசத்தில் மாணவர்கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் நிலையில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 29ஆவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கல்குடா பிரதேசத்தில் மாணவர்கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வாழ்க்கை தொலைந்து போகும் நிலவரம் இருக்கின்றது. இந்த விடயத்தில் தாய்மார் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers