நிபுணர்கள் குழு அறிக்கை அரசியலமைப்புச் சட்டவடிவில் தயாரிக்கப்பட்டது: சம்பிக்க

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையவே அரசியலமைப்பு சட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசியலமைப்பு சட்டம் போன்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் ஒன்றை பிடித்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் கடந்த 2016ஆம் ஜனவரி மாதம் ஆரம்பமாகியது.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அதற்கு இணங்கினர். 21 பேர் அடங்கிய அரசியலமைப்பு சட்ட வழிக்காட்டல் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவில், தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டனர்.

குழுவில் பல்வேறு யோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதுடன், பல உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

சமஷ்டி யோசனை முன்வைக்கப்பட்டதுடன் நான் அதனை எதிர்த்தேன். அனைத்து பிரதிநிதிகளின் யோசனைகள் மற்றும் கருதுக்கள் 9 அறிக்கைகளாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது ஒன்பது அறிக்கைகள் அல்ல தனி அறிக்கையாக இருக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது.

அந்த நிபுணர்கள் குழுவில் பிளவு ஏற்பட்டு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் அறிக்கை ஒன்றை தயாரித்தனர். அரசியலமைப்புச் சட்டம் போலவே அது தயாரிக்கப்பட்டது. அதுதான் நடந்த தவறு.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையவே அது அரசியலமைப்புச் சட்டவடிவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு எதிரான எமது நிலைப்பாட்டை நாங்கள் முன்வைத்தோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers