வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் மகாவித்தியன் தினம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் மகாவித்தியன் தினம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு சங்கத்தின் தலைவர் ப.தயாபரனின் தலைமையில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணி திரட்டும் நோக்குடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

பாடசாலையின் அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையிலிருந்து நடை பவனி மற்றும் வாகன பவனியாக பழைய மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வவுனியா பசார் வீதியினூடாக சென்று நடை பவனியானது மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

அதனையடுத்து பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

Latest Offers