கூட்டு ஒப்பந்ததிற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஆயிரம் ரூபா சம்பளவுயர்வு பெற்றுக்கொடுப்பதாக கூறி 700 ரூபா அடிப்படை சம்பளத்திக்கு கைச்சாத்திட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கம் ஊக்குவிப்பு தொகையான 140 ரூபாவையாவது வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டங்கள் கொட்டகலை மற்றும் ஹட்டன் பகுதிகளில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பவுயர் கோரி சத்தியாகிரக போராட்டமென்றை அரம்பித்துள்ளதுடன், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேசசபை முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொறு இடம்பெற்றுள்ளது.

ஆர்பட்டத்தின் போது ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக கூறி 700 ரூபா விற்கு கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது , ஆயிரம் ரூபா கொடுக்காவிட்டால் கையொப்பமிடமாட்டோம் என்று கூறிய தொழிற்சங்கங்கள் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஏமாற்றி எங்கள் கருத்தினையும் மதிக்காது கையொப்பமிட்டது இதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே எங்களுக்கு கடந்த காலத்தில் கிடைத்தை மேலதிக கொடுப்பனவு 140 ரூபா புதிய ஒப்பந்தத்தில் இல்லாமல் செய்து எமக்கு துரோகம் செய்துவிட்டனர் எனவே எமக்கு கிடைத்த 140 ரூபா மேலதிக கொடுப்பனவையாவது மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers