விஷேட அதிரடி படையினரால் கடத்தல் சம்பவம் முறியடிப்பு

Report Print Theesan in சமூகம்

சட்டவிரோதமான முறையில் முதிரைமர குற்றிகளை கடத்திச்சென்ற இருவரை கைதுசெய்துள்ளதாக புளியங்குளம் விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த விஷேட அதிரடி படையினர்,

இன்று அதிகாலை 3 மணியளவில் ஓமந்தை, குஞ்சுக்குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலிற்கமைய அப்பகுதிக்கு சென்ற புளியங்குளம் விஷேட அதிரடி படையின் பொறுப்பதிகாரி எச்.டி.லால் ஜெயதிலக தலமையிலான குழுவினர் இவ் மரக்கடத்தல் நடவடிக்கையை முறியடித்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த மரக்கடத்தலில் இரு நபர்கள் கைது செய்யபட்டதுடன் கனரக வாகனம் ஒன்றும் விஷேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டது.

கைது செய்யபட்டவர்கள் மற்றும் கனரக வாகனம், மரக்குற்றிகள் அனைத்தும் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 60 மரக்குற்றிகளும் 12லட்சம் பெறுமதியானதெனவும், விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.