சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் முற்றாக பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய் கொள்கலனொன்று தடம் புரண்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரயிலின் சரக்கு பெட்டி பகுதியே இன்று மாலை இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதேவேளை, 26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே தடம் புரண்டுள்ளது.

இதேவேளை, ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் எனவும் நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

Latest Offers