நான்கு வயது மகளை கொன்று வாவியில் வீசிய தாய்! பொலிஸாரிடம் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Murali Murali in சமூகம்

காணாமல் போனதாக கூறப்படும் 4 வயது சிறுமியை கலா வாவியில் வீசியதாக அவரது தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று குறித்த தாய் சிறுமியை தாக்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலில் சிறுமி மயக்கமடைந்துள்ள நிலையில் , அச்சமடைந்த தாய் மயக்கமடைந்த சிறுமியை கலா ஓயாவில் வீசியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேகநபரான தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த பெண் வழங்கிய தகவலுக்கு அமைய சுழியோடிகள் கலா வாவியில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, செனொரி நிஷாரா என்ற நான்கு வயது சிறுமி கருவெலகஸ்வெவ - நீலபெம்ம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த 29ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய கடந்த 4 நாட்களாக 150 பொலிஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். சிறுமி வசிக்கும் பிரதேசத்திலிருந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

எனினும் இந்த சிறுமி காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லையென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரே சிறுமிக்கு ஏதாவது செய்திருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொலிஸாரின் தீவிர விசாரணையில், தனது மகளை கொலை செய்து விட்டதாக தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளமையானது குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers