பி.எஸ்.எம் சார்ல்ஸ்சை பதவியிலிருந்து நீக்க இதுவே காரணம்! மகிந்த வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சமூகம்

வர்த்தகர்களைப் பாதுகாக்கவே சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு ஏற்ற வகையில் அரச அதிகாரிகளை இடமாற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேசிய அரசாங்கத்தை அமைப்பதென்பது நகைப்புக்குரியது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுங்க திணைக்கள பணிப்பாளராக பி.எஸ்.எம் சார்ல்ஸ் கடமையாற்றி வந்த நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வேறு ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, சுங்க திணைக்கள ஊழியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers