கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதல்! ஒருவர் பலி - கண்டுகொள்ளாத பொலிஸ்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயம் அடைந்துள்ளனர்.

பெலவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் முப்படையினரின் தலைமையகத்திற்கு அருகில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

மோதல் சம்பவத்தினை அடுத்து 119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்திற்கும் 1990 என்ற சுவசரிய அம்பியுலன்ஸ் சேவைக்கும் அழைப்பு மேற்கொண்டுள்ளனர்.

10 வினாடிகளுக்கு சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.

எனினும் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் தலங்கம பொலிஸ் நிலையம் உள்ளது. ஆனாலும் 40 நிமிடங்களின் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளனர்.

பொலிஸாரின் அசமந்த போக்கு நிலை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும் விரைந்து செயற்பட்ட சுவசரிய அம்புலன்ஸ் சேவைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Latest Offers