வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் திட்டத்தின் கீழ் நாசிவந்தீவில் 25 வீடுகள்

Report Print Navoj in சமூகம்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் “கம்உதாவ செமட்ட செவண” திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவில் 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் க.கமலநேசன், கிராம அதிகாரி க.ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு 25 பயனாளிகளுக்கு 13 பேர்ச் காணியும், ஐந்து இலட்சம் ரூபாய் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதி பயனாளிகளின் பங்களிப்புடன் வீட்டுத் திட்டம் அமையபெறவுள்ளது.

Latest Offers