யாழில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது சுதந்திர தின நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த தேசிய விழா யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன்போது இராணுவ மற்றும் பொலிஸாரின் அணி வகுப்பும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ள நிலையில், இதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சுங்கானை கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றதை தொடர்ந்து, யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசை மற்றும், மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், தமிழர் பாரம்பரிய நடன நிகழ்வான கோலாட்டம், மயிலாட்டம் என்பனவும் இடம்பெற்றுள்ளன.

ஆதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக வளாகத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர் மரம் நாட்டி வைத்துள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வில், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள், முப்படை அதிகாரிகள், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers

loading...