சட்டவிரோதமான முறையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுத்துவக்கு வைத்திருந்த நபரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அன்பாஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கோணேசபுரி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கு வைத்து மிருகங்களை வேட்டையாடுவதாகவும், வயலுக்கு காவலுக்கு கொண்டு செல்லுவதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபரின் வீட்டினை சோதனையிட்ட போது வீட்டில் கூரைப் பகுதியிலிருந்து கட்டுத்துவக்கு கைப்பற்றப்பட்டுள்ளது.

Latest Offers