தமிழர் தலைநகரில் சிறப்பாக இடம்பெற்ற இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று தமிழர் தலைநகரான திருகோணமலையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

பிரெட்றிக்கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண பிரதம செயலகமும், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதில் முற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.