சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது, வட்டுவாகல் அறநெறிப் பாடசாலையின் முதல்வர் அ.செல்வரத்தினத்தின் தலைமையில், நடைபெற்றுள்ளது.

அபிவிருத்தி வளர்ச்சியுடன் ஆன்மீக பண்புகளை வளர்த்தல் "சிறுவர்களுக்கான அறநெறிப் பாடசாலை" என்னும் செயற்றிட்டத்தினூடாக, வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் குறித்த அறநெறிப் பாடசாலை அமைக்கப்டவுள்ளது.

விருந்தினர் வரவேற்புடன் நிகழ்வு தொடங்கியிருந்த நிலையில், இதன்போது அறநெறி பாடசாலை அமைப்பதற்குரிய கல்வெட்டுத் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மரபுவழியில் வட்டுவாகல் சப்த கன்னிமார் கோவிலில் இறை வழிபாடுகள் இடம்பெற்று, தொடர்ந்து அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கோ.தனபாலசுந்தரம் (மேலதிக மாவட்டசெயலர்), சி.சிவஜெயந்தன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர்) உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers