மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

Report Print Thirumal Thirumal in சமூகம்

சரக்கு ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

நாவலப்பிட்டியிலிருந்து நானு ஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய்க் கொள்கலன் ஒன்று நேற்று மாலை, கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் குறித்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும் நேற்று இரவு 9.45 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

26,630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிப்போவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers