மருதங்குளம், புத்துவெட்டுவான் பகுதிகளில் வீதிகளில் உலரவிடப்படும் நெல்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மருதங்குளம், புத்துவெட்டுவான் பகுதிகளில் நெல் உலர விடுவதற்கான தளங்கள் போதியளவு இன்மையால் வீதிகளில் நெல்லை உலரவிட வேண்டிய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், மருதங்குளம் போன்ற பகுதிகளில் போதியளவு நெல் உலர விடும் தளங்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, புத்துவெட்டுவான் கிராமத்தில் ஒரு நெல் உலரவிடும் தளமும், ஐயன்கன்குளம் கிராமத்தில் ஒரு நெல் உலர விடும் தளமும் காணப்படுகின்றது.

குறித்த பிரதேசங்களில் காலபோகத்திலும், சிறுபோகத்திலும் சகல விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் அறுவடைகளை ஆரம்பிப்பதால் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உலர வைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதனால் தற்போது இருக்கின்ற நெல் உலரவிடும் தளங்களைவிட மேலதிகமாகவும் தளங்கள் தேவைப்படுகின்றன.

அத்துடன், தற்போது அறுவடை செய்யும் நெல்லை வீதிகளில் வைத்து பெரும் சிரமங்களின் மத்தியில் உலர விடுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.