கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட இரண்டு குழுக்களுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இலங்கையின் சுதந்திர தினமான இன்று பகல் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட இரண்டு குழுக்களுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்ப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இருதரப்புக்களின் எதிர் எதிர் கோசங்களால் அமைதின்மை ஏற்பட்டது. வலிந்து காணமல்ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரியும் அரசுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பிய போராட்டம் இடம்பெற்றபோது, போரட்டத்தில் கலந்துகொண்ட ஒரு குழுவினர் பொதுமக்களின் போராட்டக்கோரிக்கைகளை மழுங்கடிக்கும் வகையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தின் தொடக்க இடத்திலிருந்து முடிவு இடம்வரை நடந்துசென்றனர்.

போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் சுமந்திரனிற்கு எதிராக கோசங்களை எழுப்ப கூட்டமைக்கார் அதற்கு எதிராக எதிர் கோசங்களை எழுப்பியவாறு சென்றதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சூழலில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ஒரு தரப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிரான கோஷங்களை எழுப்பிய நிலையில், தமிழ் தேசிய கூடமைப்பின் ஆதரவாளர்களுக்கும், கோஷங்களை எழுப்பியவர்களுக்குமிடையில் ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளையிம், போராட்டத்தில் கலந்து கொண்ட பங்கு தந்தை ஒருவரும் சமாதானமான முறையில் ஒற்றுமையாக போராட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டதுக்கமைய குறித்த போராட்டம் சமாதானமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அமைப்பாளர் பொன்னம்பல கஜேந்திரகுமார், ஜெ.கஜேந்திரகுமார், மத தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers