தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்துடன் மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு

Report Print Ashik in சமூகம்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வு மன்னாரிலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தில் காலை 8.15 மணியளவில் முப்படையினர், பாடசாலை மாணவர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு, காலை 8.50 மணியளவில் தேசிய கொடி மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, சர்வ மத நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வில் முப்படைகளின் உயரதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers