வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டம்

Report Print Theesan in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 09.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டு நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார்.

அதன் பின் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் அதன்பின்னர் பாடசாலை மாணவர்கள், படையினரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.