மிரிஹான, நுகேகொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தில் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொம்பே, மீகொட பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றைய பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.