சுதந்திர தினத்தை முன்னிட்டு தொம்பே பகுதியில் நடத்தப்பட்ட வைத்திய முகாம்

Report Print Sinan in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் நாட்டின் பல பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கம்பஹா, தொம்பே பகுதியில் வைத்திய முகாமொன்று நடத்தப்பட்டுள்ளது.

பூகொடை, குமாரி முல்லை முஸ்லிம் மாகா வித்தியாலயத்தில் இந்த வைத்திய முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வகையில் வித்தியாலயத்தில் பற்சிகிச்சை முகாம், இரத்த தான முகாம், இலவச கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட்டிருந்தன.

இதில் பெருந்திராளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.