தலையில் கறுப்பு துணியுடன் சுதந்திர தினத்தில் வீதிக்கு இறங்கிய மக்கள்

Report Print Navoj in சமூகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் கண்ணீருக்கு முடிவு என்ன என்ற வாசகத்துடன் வலிந்து காணப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்பு போராட்டமொன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில், இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளை தொலைத்த பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தலையில் கறுப்பு துணி கட்டி தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...