மகளின் காதலனுக்கு தாயால் நேர்ந்த கொடூரம்! துண்டான காது பகுதியுடன் சென்று முறைப்பாடு

Report Print Steephen Steephen in சமூகம்

மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி உத்தரவிட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வரும் மகளின் சமவயது மாணவன் கடந்த 1 ஆம் திகதி வீட்டிற்கு வந்துள்ளார்.

வெளியில் சென்றிருந்த பெண் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வீட்டில் இருந்த மாணவனுக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளதுடன் பெண், மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோடி பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளார்.

மொரஹெல, பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த மாணவனின் காதையே பெண் கடித்துள்ளார். துண்டான காது பகுதியுடன் பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

உடனடியாக காது பகுதியை பொலிஸார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அதனை பொருத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

சந்தேகநபரான பெண்ணின் மகளும், காயமடைந்த இளைஞனும் பலாங்கொடை நகரில் பாடசாலை ஒன்றில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றனர்.

எவ்வாறாயினும் உடைந்து போன செல்போனை திருத்திக்கொடுப்பதற்காக மாணவன் வீட்டிற்கு வந்திருந்ததாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.