வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 518 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாததாலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களோடு 10 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த 70 வயதுக்கு மேற்பட்டவர்களுமே இவ்வாறு ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.