சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள்

Report Print Navoj in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்றையதினம் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கோறளைப்பற்று மத்தி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கரவண்டி பேரணியை நடத்தியதுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய சந்தியில் சுதந்திரதின நிகழ்வுகளை அதன் தலைவரும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான கே.எல்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கல்குடா முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கமும் கல்குடா தொகுதி ஐக்கிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கமும் இணைந்து அதன் தலைவர்களான எம்.புஹாரி மற்றும் எம்.எஸ்.எம்.சபீர் ஆகியோரது தலைமையில் நடத்திய முச்சக்கரவண்டி பேரணி ஓட்டமாவடியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனையினூடாக ஓட்டமாவடி பிரதேச சபையை சென்றடைந்துள்ளது.

Latest Offers

loading...