கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

Report Print Suman Suman in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது.

இன்று காலை எட்டு ஐம்பது மணிக்கு இலங்கையின் தேசிய கொடியை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், மக்களுக்கும் உதவிகளும் வழங்கப்பட்டன. பின்னர் மாவட்ட செயலக மண்டபத்தில் சிரதமானமும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 57 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப் பிரிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன, மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers