சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை

Report Print Mubarak in சமூகம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து ஆறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வாவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஏ.பி.அபேரத்தின,ஜெயிலர் அருள் வண்ணனே,தயாகரன், பெரேரா, புனர் வாழ்வு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers