மாலியில் கொல்லப்பட்ட படையினரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

Report Print Steephen Steephen in சமூகம்

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில், கடமையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு நடந்த குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இலங்கை படையினரின் உடல்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 3 மணியளவில் உடல்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. இராணுவத்தினரின் உடல்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பொறுப்பேற்றுள்ளார்.

மாலியில் கொல்லப்பட்ட இலங்கை படையினரின் உடல்கள் நேற்று முன்தினம் இலங்கை கொண்டு வரப்படவிருந்த நிலையில், விமான தாமதம் காரணமாக கொண்டு வர முடியவில்லை.

கடந்த மாதம் 25 ஆம் திகதி நடந்த இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ கப்டன் எச்.டப்ளியூ.டி. ஜயவிக்ரம மேஜர் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டதுடன் கோப்ரல் எஸ்.எஸ்.விஜேவிக்ரம சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.

Latest Offers

loading...