கேப்பாப்புலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளில் குடியிருக்கும் உரிமைகள் தடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் 71வது சுதந்திர தினத்தை கரி நாளாக தெரிவித்துக் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை, கரிநாளாக நினைவுக்கொள்ளும் வகையில் கேப்பாப்புலவு பகுதியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மக்களுடன் இணைந்து யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்க ழக மாணவர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்

இதில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே கேப்பாப்புலவில் இருந்து வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.

'எங்கள் தாய்நிலம் எங்களுக்கு வேண்டும் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்றும் நோக்கோடு, எங்கள் நிலத்தை கேட்டு, இலங்கையின் இரண்டு சுதந்திர தினத்தை சந்தித்த, சுதந்திரமில்லாத மக்களாக நாம் இந்த மண்ணில் வீதியோரத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவருகின்றோம்.

இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர நாளை துக்கநாளாக, கறுப்பு பட்டி அணிந்து நினைவுகொள்கின்றோம். எங்கள் மண்ணில், எங்கள் வீடுகளில், எங்கள் பொருளாதாரத்தை வைத்து எப்போது வாழ்கின்றோமோ அன்றுதான் எங்களுக்கு சுதந்திர நாளெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.