இலங்கையில் முதியோருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையில் வயோதிபர்களில் 5 முதல் 7 வீதமானோர் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனோவியல் மருத்துவம் தொடர்பான பேராசிரியர் ரவின் ஹங்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 12 லட்சம் முதியோர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டளவில் மனிதனுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக மன அழுத்த நோய் இருக்கும்.

உளவியல் நோயான மன அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு அடுத்தப்படியான நோயாக இருக்கின்றது.

மன அழுத்த நோயினால், பாதிக்கப்பட்டுள்ள பலர், தம் மன அழுத்த நோயினால், பாதிக்கப்பட்டிருப்பதை அறியாதிருக்கின்றனர். இதனால், வேகமாக சமூக சூழலில் இருக்கும் அனைவரும் இது குறித்து அறிந்துக்கொள்வது முக்கியமானது எனவும் மருத்துவர் ரவின் ஹங்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.