கழுதையால் ஏற்பட்ட விபத்து - பரிதாபமாக இறந்த இளைஞன்

Report Print Steephen Steephen in சமூகம்

புத்தளம், கல்பிட்டி, வெள்ளாங்கரை பிரதேசத்தில் இன்று மோட்டார் சைக்கிளில் கழுதை மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கழுதை மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் புரண்டு விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 18 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல்துறையை சேர்ந்த மொஹமட் அக்கீல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்பிட்டி உட்பட புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கட்டாகாலி கழுதைகளால் கடந்த காலங்களிலும் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.