வவுனியாவில் கொட்டும் மழையிலும் தொடரும் ஆர்ப்பாட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கொட்டும் மழையிலும் காணாமல் போனவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகரின் ஊடாக 715வது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் கொட்டகையில் ஊர்வலமாக சென்றடைந்திருந்திருந்தது.

இதேவேளை, இவ்வார்ப்பாட்டத்தின் போது எங்களது பிள்ளைகள் எமக்கு வேண்டும், எமது உறவுகள் எமக்கு வேண்டும், அமெரிக்காவே எமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வரவேண்டும் என்ற கோசங்களையும் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers