மலையக கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்ட 71ஆவது சுதந்திர தினம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த சுதந்திர தினத்தினை நகர் பகுதியில் வாழும் மக்கள் மட்டு மன்றி மலையக தோட்ட பகுதி மற்றும் கிராம மக்களும், இணைந்து ஹட்டன் ரொத்தஸ் கொலனியில் கொண்டாடியுள்ளனர்.

இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாட்டினுடைய சுதந்திரத்தினை கொண்டாடப்படுவதன் மூலம் சமூகங்களிடையே ஏற்படும் ஒற்றுமை நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பதனை வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்நிகழ்வில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமார் மற்றும் சூழல் பொறுப்பு உத்தியோகத்தர் மகேஸ்வரன் உட்பட தோட்ட மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...