நூலகம், மைதானத்தை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் நூலக காணியின் எஞ்சிய பகுதியினையும், மத்திய விளையாட்டு மைதானத்தையும் விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(04) காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி ஏ9 பிராதான வீதியில் மத்திய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நூலக காணியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்ட போதும் எஞ்சிய பகுதியினையும் விடுவிக்க கோரியும், மத்திய விளையாட்டு மைதானம் தற்போது அரைகுறை புனரமைப்பு பணிகளுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் காணப்படுகிறது. எனவே அதனை பிரதேச சபையிடம் கையளிக்க கோரியும் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், தனியார் கல்வி நிலைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers

loading...