யாழில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம் என்ற தொணிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers