யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!

Report Print Sumi in சமூகம்

சாவகச்சேரி பகுதியில் 72 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரை யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ். சாவகச்சேரி நகரப் பகுதியில் வைத்து இன்று (04) இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 72 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers