அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இலங்கையின் 71வது சுதந்திரதின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது தேசிய கொடி பிரதேச செயலாளரினால் ஏற்றிவைக்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அத்துடன், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டனர். இந்நிகழ்வில், மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.